முகப்பு
இந்தியா

ஹிமாசலில் 3 மணி நிலவரப்படி 55 % வாக்குகள் பதிவு

ஹிமாச்சல பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 12 நவம்பர், 2022 at 4:06 PM
பகிர்:

ஹிமாச்சல பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

காலையில் நிலவிய குளிர்ந்த சீதோஷ்ண நிலையையும் பொருட்படுத்தாமல் கிராமப்புறங்களில் பெண்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். 

வாக்குப்பதிவின் முதல் ஒரு மணி நேரத்தில் 4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. காலை 11 மணிக்கு 18 சதவீதமும், 1 மணிக்கு 38 சதவீதமாக இருந்தது. தறபோது 3 மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

Advertisement

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது. 68 தொகுதிகள் கொண்ட ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைக்கான தோ்தல் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 7,884 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறுகிறது. டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.