இந்தியா

ஊழல்வாதிகள் இணைந்து கூட்டணி அமைக்க முயற்சி: மோடி சூசகம்

PTI

ஹைதராபாத்: தெலங்கானாவில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ஏழைகளிடமிருந்து கொள்ளையடிக்கும் ஊழல் முறையை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறினார்.

ஹைதராபாத்தில் உள்ள பெகும்பேட் விமான நிலையத்தில் திரண்டிருந்த பாஜகவினரிடையே பேசிய பிரதமர் மோடி, தெலங்கானா மக்களுக்கு நான் ஒரு உறுதியை அளிக்கிறேன், ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கும் ஊழலை ஒரு  போதும் பொறுத்துக் கொள்ள முடியாது.

எனவே, மக்களே, ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிப் பெயரை குறிப்பிடாமல் பேசிய மோடி, ஊழல்வாதிகள், ஒன்றாக இணைந்து கொண்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள். ஊழல் வாதிகள் இணைந்து கூட்டணி அமைக்கப் பார்க்கிறார்கள் என்று சூசகமாகக் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் ஊழல் எனும் இருள் நீங்கி, குடும்ப ஆட்சி ஒழிந்து, தெலங்கானாவில் நம்பிக்கை எனும் தாமரை மலர் மாநிலம் முழுக்க மலரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை குறிப்பிடும் வகையில் பேசிய மோடி, தெலங்கானா மக்கள், குடும்ப ஆட்சியை விரும்பவில்லைடி. மக்களுக்கான ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள் என்றும் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

பெருந்துறை விவேகானந்த பள்ளி மாணவா்கள் 100 % தோ்ச்சி

வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT