இந்தியா

தில்லியில் 5.4 ரிக்டர் நிலநடுக்கம்

DIN

தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். 

இது ரிக்டர் அளவில் 5.4ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கமானது 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் மக்கள் தஞ்சம் புகுந்தனர். 

தில்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத்தில் 54 நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நிலநடுக்கம் காரணமாக வீடுகளில் ஏற்பட்ட அதிர்வுகள் தொடர்பான விடியோக்களையும் மக்கள் இணையதளங்களில் பதிவிட்டுள்ளனர். 

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. அதேசமயம் நேபாளத்திலும் இன்று இரவு 7.57 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT