புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 474 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் ஒருவர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளார்.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 474 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதிக்குப் பிறகு அதாவது சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் பதிவாகும் மிகக் குறைவான கரோனா தொற்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. காத்திருக்கின்றன மோர்பியில் மரித்தவர்களின் ஆன்மாக்கள்!
இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,46,67,398 ஆக உள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,533 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,27,724ஆக பதிவாகியுள்ளது. அதேவேளையில், நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,918 ஆகக் குறைந்துள்ளது.
இதையும் படிக்க.. 35 துண்டுகளாக்கப்பட்ட காதலி: காதலனின் திடுக்கிடும் வாக்குமூலம்; திரில்லர் படத்துக்கு சற்றும் குறையாத சம்பவங்கள்
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 219.81 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.