மாலத்தீவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் இணைந்து பணியாற்றிய 14 பேர் கைது!
மாலத்தீவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் இணைந்து பணியாற்றிய 14 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மாலத்தீவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் இணைந்து பணியாற்றிய 14 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் இஸ்லாமிய அரசு குழுவுடன் இணைந்து பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்ததாக அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புத் தலைவர் உஸ்வத் அகமது திங்கள்கிழமை இரவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை மூன்று இடங்களில் சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டதாகவும், 13 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மாலத்தீவு அழகிய கடற்கரைகள் மற்றும் விடுதிகளுக்குப் பெயர் பெற்றது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் மத தீவிரவாதம் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.