இந்தியா

இந்தியாவில் 501-ஆக குறைந்த கரோனா பாதிப்பு! 

DIN

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 501 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இருவர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 501 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் கரோனா தொற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,46,66,676 ஆக உள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,535 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,28,580ஆக பதிவாகியுள்ளது. அதேவேளையில், நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,561 ஆகக் குறைந்துள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 219.82 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT