இந்தியா

தந்தை, மாமா, தாத்தாவால் வன்கொடுமை செய்யப்பட்ட 17 வயது சிறுமி!

கல்லூரியில் அமைக்கப்பட்ட விஷாகா கமிட்டியில், தந்தை, மாமா, தாத்தா ஆகியோரால் கடந்த 6 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து சிறுமி மனம் திறந்துள்ளார்.

DIN


புணேவில் தந்தை, மாமா, தாத்தாவால் 17 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்த இந்த வன்கொடுமை வழக்கில் தந்தையை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட விஷாகா கமிட்டி மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கல்லூரியில் அமைக்கப்பட்ட விஷாகா கமிட்டியில், தனது தந்தை, மாமா, தாத்தா ஆகியோரால் கடந்த 6 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து சிறுமி மனம் திறந்துள்ளார். கல்லூரி நிர்வாகம் இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்து வழக்குப்பதிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர், 49 வயதான சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர். மேலும், தாத்தா, மாமா ஆகியோர் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT