இந்தியா

காசி-தமிழ்ச் சங்கமம்: நவ.19-ல் தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி! 

வாராணசியில் ஒரு மாத காலம் நிகழும் காசி-தமிழ்ச் சங்கமத்தை பிரதமர் நரேந்திர மோடி நவ. 19-ல் தொடங்கி வைக்கிறார். 

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் "காசி-தமிழ்ச் சங்கமம்" நிகழ்ச்சியை நவ. 19-ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். 

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.  நவ.19 தொடங்கி ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் ரயில்வே, சுற்றுலா, கலாசார துறைகள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளது. 

வாராணசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆம்பிதியேட்டர் மைதானத்தில் இந்த சங்கமம் கோலாகலமாக நடைபெற உள்ளது. 

வாராணசிக்கும் தமிழகத்துக்கும் இடையே கலாசார தொடர்புகளைப் புதுப்பிக்கும் நோக்கில் காசி-தமிழ்ச் சங்கமம் வாராணசியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஒரே நாடு ஒரே அமைப்பு என்ற உணர்வைக் கொண்டாடுவது மற்றும் தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை முன்னிலைப்படுத்துவது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரையிலான இந்த சங்கமத்தை காசிக்கும் (வாரணாசி) தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான அறிவுப் பிணைப்பையும், பழங்கால நாகரிகத் தொடர்பையும் மீண்டும் கண்டறியும் முயற்சியாகும். 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதல்வர் ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி: இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT