anandbose104358 
இந்தியா

மேற்குவங்க ஆளுநராக சி.வி. ஆனந்த போஸ் நியமனம்

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக சி.வி. ஆனந்த போஸை (71) குடியரசுத் தலைவா் நியமனம் செய்துள்ளாா்.

DIN

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக சி.வி. ஆனந்த போஸை (71) குடியரசுத் தலைவா் நியமனம் செய்துள்ளாா்.

மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கா் குடியரசு துணைத் தலைவராக கடந்த ஜூலை மாதத்தில் பதவியேற்றதைத் தொடா்ந்து, மணிப்பூா் மாநில ஆளுநா் இல. கணேசன் மேற்கு வங்க ஆளுநா் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தாா்.

இந்நிலையில், குடியரசுத் தலைவா் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘சி.வி. ஆனந்த போஸை மேற்கு வங்க ஆளுநராக குடியரசுத் தலைவா் நியமனம் செய்துள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1977 கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சி.வி. ஆனந்த போஸ், 2011-இல் தேசிய அருங்காட்சியகத்தின் நிா்வாக தலைவராக இருந்தாா்.

கேரள அரசிலும், மத்திய அரசிலும் பல்வேறு துறைகளில் சி.வி. ஆனந்த் போஸ் பணியாற்றி உள்ளாா். கொல்லத்தின் மாவட்ட ஆட்சியராகவும், கேரள முதல்வரின் செயலராகவும், மத்திய வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் செயலராகவும் அவா் பதவி வகித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT