முகப்பு
இந்தியா

சபரிமலைக்கு சென்ற பேருந்து கவிழ்ந்தது , 43 பேர் காயம்

ஆந்திரத்தில் இருந்து சபரிமலை பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் ஒரு சிறுவன் உட்பட 43 பேர் காயமடைந்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:53 AM
கோப்புப் படம்
பகிர்:

ஆந்திரத்தில் இருந்து சபரிமலை பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் ஒரு சிறுவன் உட்பட 43 பேர் காயமடைந்துள்ளனர்.

பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்தவர்களில், 8 வயது நிரம்பிய சிறுவன் மணிகண்டன் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சிறுவனின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அசம்பாவிதம், சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு விஜயவாடாவுக்குத் திரும்பியபோது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்த சம்பவம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த விபத்தில் 43 பேர் காயமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுநர் சாலையின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

இது குறித்து கேரள சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது முகநூல் பதிவில் கூறியதாவது: விபத்து நேர்ந்த ஒரு மணி நேரத்திலேயே பேருந்தில் பயணித்த அனைவரும் மீட்கப்பட்டு அவர்கள் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதால் சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், 4 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →