இந்தியா

''சம்போ.. சிவ சம்போ..'' காசி - தமிழ் சங்கமம் விழாவில் பாடிய இளையராஜா

'நான் கடவுள்' திரைப்படத்தில் இடம்பெற்ற ''சம்போ.. சிவசம்போ..'' எனத் தொடங்கும் பாடலை இளையராஜா தனது குழுவினருடன் சேர்ந்து பாடினார். 

DIN

காசி- தமிழ் சங்கமம் விழா தொடக்க நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற கச்சேரியில் இளையராஜா பாடல் பாடினார். 

நாட்டின் மிக முக்கியமான மற்றும் புராதன பகுதியான காசிக்கும் தமிழகத்திற்குமிடையே உள்ள பழமையான தொடா்பை மீண்டும் கண்டறிந்து, உறுத்திப்படுத்திக் கொண்டாடும் நோக்கத்துடன் ’காசி- தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சிகள் வாரணாசியில் (காசி) நவம்பா் 17 -ஆம் தேதி முதல் டிசம்பா் 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இன்று (நவ.19) தொடக்கை வைத்தார். 

தொடக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இதில், நான் கடவுள் திரைப்படத்தில் இடம்பெற்ற ''சம்போ.. சிவசம்போ..'' எனத் தொடங்கும் பாடலை இளையராஜா தனது குழுவினருடன் சேர்ந்து பாடினார். 

இளையராஜாவின் இசைக்கச்சேரியை பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கண்டு களித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT