இந்தியா

வாராணசியில் தமிழ் சங்கமம் விழா தொடக்கம்: பிரதமர் மோடி பங்கேற்பு!

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் காசி-தமிழ் சங்கமம் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.  

வாராணசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் காசி-தமிழ் சங்கம விழாவில் பிரதமர் மோடி பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்றுள்ளார். 

நாட்டின் மிக முக்கியமான மற்றும் புராதன பகுதியான காசிக்கும் தமிழகத்திற்குமிடையே உள்ள பழமையான தொடர்பை மீண்டும் கண்டறிந்து, உறுத்திப்படுத்திக் கொண்டாடும் நோக்கத்துடன் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் வாரணாசியில் இன்று முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. 

காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசின் கல்வி, கலாசாரம் உள்ளிட்ட 7 துறை அமைச்சகங்களுடன் உ.பி. அரசும் இணைந்து நடத்துகிறது.

இரு பிராந்தியங்களில் இருந்தும் அறிஞா்கள், மாணவா்கள், தத்துவவாதிகள், வா்த்தகா்கள், கைவினைஞா்கள், கலைஞா்கள் மற்றும் பிற தரப்பு மக்களும் ஒன்றிணைந்து, அவா்களின் அறிவு, கலாசாரம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிா்ந்துகொள்வதற்கும், இரு தரப்பு அனுபவங்களை கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பளிப்பதே இந்த சங்கமத்தின் நோக்கமாகும்.

இந்நிகழ்ச்சியில், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT