இந்தியா

பணிநீக்க நடவடிக்கையில் இறங்கும் ஜொமாட்டோ

பிரபல உணவு விநியோக நிறுவனமான ஜொமேட்டோ ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது அந்நிறுவன ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

பிரபல உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது அந்நிறுவன ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை வேலைநீக்கம் செய்து வருகின்றன. இணையத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாட்டில் பிரபல உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தங்களது பணியாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 3 சதவிகிதத்தினரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “செயல்திறன் மந்தநிலையின் அடிப்படையில் 3 சதவிகித பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். வேறு எதுவும் காரணமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டிவிட்டர் தங்களது நிறுவனத்தில் 90 சதவிகிதமான பணியாளர்களை பணிநீக்கம் செய்தது. அதேபோல் மெட்டா நிறுவனத்தின் முகநூல் 13 சதவிகித பணியாளர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் புறா... காவ்யா அறிவுமணி!

இயக்குநராகும் கென் கருணாஸ்!

சரிவிலிருந்து மீட்ட டிம் டேவிட்... 109 மீட்டருக்கு சிக்ஸர்!

நானும் நாணமும்... ஜாஸ்மின் ராத்!

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி இழப்பு!

SCROLL FOR NEXT