கோப்புப்படம் 
இந்தியா

மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஏர் இந்தியா

சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்தும் வகையில், ஏர் இந்தியா இன்று மிக முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

IANS


புது தில்லி: சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்தும் வகையில், ஏர் இந்தியா இன்று மிக முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களுக்கு புதிதாக 6 விமானச் சேவையை ஏர் இந்தியா அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க.. மங்களூரு குண்டு வெடிப்பு: குற்றவாளி வாட்ஸ்ஆப்பில் ஆதியோகி சிவன் படம் வைத்தது ஏன்?

மும்பை நகருடன் நியூ யார்க், பாரீஸ், ஃபிராங்க்பர்ட் நகரங்களை இணைக்கும் விமான சேவையையும், இடைநில்லா விமானச் சேவையை மீண்டும் தொடங்கும் வகையில், தில்லி நகரை கோப்பன்ஹேகன், மிலன், வியன்னா ஆகிய நகரங்களை இணைக்கும் விமான சேவையையும் அறிமுகப்படுத்துகிறது.

புதிய விமானங்களை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்து, தனது விமானச் சேவையை அதிரடியாக தீவிரப்படுத்திவரும் ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்பு பல விமானப் பயனிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக மாறியிருக்கிறது.

மும்பை - நியூயார்க் விமான சேவை 2023, பிப். 14 முதல் தினந்தோறும் இயக்கப்படவிருக்கிறது. பிப்ரவரி 1 முதல் தில்லி - மிலன் வாரந்தோறும் 4 விமான சேவையும், மார்ச் 1 முதல் தில்லி - வியன்னா, தில்லி - கோப்பன்ஹேகன் விமான சேவை வாரத்தில் 3 நாள்களும் இயக்கப்படவிருக்கிறது.

புதிய அறிவிப்பின் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏர் இந்தியாவின் இடை நிறுத்தமில்லா விமான சேவையின் எண்ணிக்கை 79 ஆகவும், பிரிட்டனுக்கு 48 ஆகவும் அமெரிக்காவுக்கு 47 ஆகவும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

SCROLL FOR NEXT