இதுதான் குஜராத்தின் அடுத்த 25 ஆண்டு காலத்தை தீர்மானிக்கும்: மோடி 
இந்தியா

இதுதான் குஜராத்தின் அடுத்த 25 ஆண்டு காலத்தை தீர்மானிக்கும்: மோடி

குஜராத் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்தான், மாநிலத்தின் அடுத்த 25 ஆண்டு காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

PTI


பலன்பூர்: குஜராத் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்தான், மாநிலத்தின் அடுத்த 25 ஆண்டு காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பலன்பூரில் இன்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்திலும், மத்தியலும் பாஜக ஆட்சி நடைபெற்றக் காலத்தில், மாநிலத்துக்கு ஏராளமான மேம்பாட்டுத் திட்டங்கள் செய்துமுடிக்கப்பட்டுள்ளன. மாநிலம் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்றார்.

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில், குஜராத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி பேசுகையில், இந்த தேர்தல் வெறுமனே யார் எம்எல்ஏவாகப் போகிறார்கள், எந்தக் கட்சி மாநிலத்தை ஆளப்போகிறது என்பதை மட்டும் தீர்மானிக்கப்போவதில்லை.

இந்த தேர்தல்தான், அடுத்த 25 ஆண்டுகளுக்கு குஜராத் மாநிலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கப் போகிறது.  மாநிலம் மிகப்பெரிய பாய்ச்சலை சந்திக்கப் போகிறது தற்போது என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT