கோப்புப்படம் 
இந்தியா

ஒற்றைப் பெயர் கொண்டவர்கள் இனி இந்த நாட்டுக்குப் போக முடியாதாம்

பாஸ்போர்ட்டில் ஒற்றைப் பெயர் வைத்திருப்பவர்கள் இனி எந்த விசாவிலும் தங்கள் நாட்டுக்கு வர முடியாது என்று தெரிவித்திருப்பதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

DIN

பாஸ்போர்ட்டில் ஒற்றைப் பெயர் வைத்திருப்பவர்கள் இனி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்து செல்ல முடியாது என்று அந்நாட்டு  அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தங்களது வணிக கூட்டாளியான இண்டிகோ விமான சேவை நிறுவனத்திடம் இது பற்றி கூறுகையில், பாஸ்போர்ட்டில் ஒற்றைப் பெயர் வைத்திருப்பவர்கள் இனி எந்த விசாவிலும் தங்கள் நாட்டுக்கு வர முடியாது என்று தெரிவித்திருப்பதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு, பாஸ்போர்ட்டில் ஒற்றைப் பெயர் கொண்டவர்கள் சுற்றுலா, தங்கிச் செல்ல அல்லது எந்த விதமான விசா பெற்றும் வர முடியாது என்றும், இந்த விதிமுறை திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, பாஸ்போர்ட்டில் முதல் மற்றும் இரண்டாவது பெயர்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை.

இது குறித்து தகவல் தெரிவிப்பது என்னவென்றால், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, 2022ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி முதல், பாஸ்போர்ட்டில் ஒரே ஒரு பெயர் அல்லது ஒற்றைப் பெயர் கொண்டவர்கள், எந்த விசா பெற்றும் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்க உரிமம் பெற்றவர்கள் அல்லது நிரந்தர விசா பெற்றவர்கள், தங்களது பாஸ்போர்ட்டில் ஒற்றைப் பெயரையே குடும்பப் பெயர் இடம்பெற வேண்டிய இடத்திலும் பதிவேற்றி புதுப்பித்திருந்தால் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! கனிமொழிக்கு பெரியார் விருதை வழங்கினார் ஸ்டாலின்!

சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

SCROLL FOR NEXT