இந்தியா

இந்தியாவில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,881 ஆகக் குறைவு!

DIN

புது தில்லி: நாட்டில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா தொற்று 408 ஆகக் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 408 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,46,70,483 ஆக உள்ளது. 

மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,601 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,34,001 ஆகப் பதிவாகியுள்ளது. அதேவேளையில், நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,881 ஆகக் குறைந்துள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 219.88 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம்

சத்தி ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

SCROLL FOR NEXT