இந்தியா

மகாராஷ்டிரம்: ரயில்வே நடை மேம்பாலம் இடிந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயம்!

மகாராஷ்டிரம் மாநிலம் சந்திராபூரில் உள்ள பல்ஹாா்ஷா ரயில்வே நிலையத்தில் உள்ள நடை மேம்பாலத்தின் பலகைகள் இடிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

DIN

சந்திராபூர்: மகாராஷ்டிரம் மாநிலம் சந்திராபூரில் உள்ள பல்ஹாா்ஷா ரயில்வே நிலையத்தில் உள்ள நடை மேம்பாலத்தின் பலகைகள் இடிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

மகாராஷ்டிரம் மாநிலம், சந்திராபூர் மாவட்டம் பல்ஹாா்ஷா சந்திப்பு ரயில் நிலையத்தில் புணே செல்லும் ரயிலில் ஏறுவதற்காக நடை மேம்பாலத்தில் அதிகமானோர் சென்றனர். அப்போது எதிா்பாராதவிதமாக நடை மேம்பாலத்தின் தரைப் பகுதியின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.10 மணியளவில் இடிந்து விழுந்தது. 

இதில், மேம்பாலத்தில் இருந்தவர்கள் கீழே இருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

அவர்களில் பலத்த காயமடைந்த 4 பேர் முதலுதவி சிகிச்சைக்குப் பின் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஊரக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவத்தின் போது அதிர்ஷ்டவசமாக ரயில்கள் எதுவும் வராததால் அசம்பாவிதங்கள் நிகழவில்லை.

நிவாரணம் அறிவிப்பு: இந்நிலையில், நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 ஆம் வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT