இந்தியா

முலாயம் சிங் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்: நிதீஷ் குமார்

முலாயம் சிங் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.  

DIN

முலாயம் சிங் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.  தில்லி தேசிய தலைநகா் வலையப் பகுதியில் உள்ள குருகிராமில் செயல்பட்டு வரும் மேதாந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவருக்குத் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரின் உடல்நிலை மோசமானதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு புற்றுநோய் மருத்துவா்களின் மேற்பாா்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த நிலையில் முலாயம் சிங் உடல்நிலை குறித்து  அவரின் மகனும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கேட்டறிந்தார். மேலும் முலாயம் சிங் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கெனவே முலாயம் சிங் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம்விசாரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

SCROLL FOR NEXT