ஆந்திரம்: காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டடங்கள், வாகனங்கள் சேதம்
ஆந்திரத்தில் காவல்நிலைய வளாகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் வாகனங்கள் சேதமடைந்தன.
ஆந்திரத்தில் காவல்நிலைய வளாகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் வாகனங்கள் சேதமடைந்தன.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கங்காதரநெல்லூர் காவல்நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காவல் நிலையத்தின் கட்டடம் மற்றும் அருகிலிருந்த வீடுகளின் கதவுகள், ஜன்னல் கண்ணாடிகளும் சேதமடைந்தன. மேலும் காவல்நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாயின.
வெடிவிபத்தின் போது காவல் நிலைய வளாகத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதேசமயம் காவல் நிலையத்தில் இருந்த காவலர் ஒருவர் லேசான காயம் அடைந்தார். உடனடியாக காவல் நிலையத்திற்கு விரைந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு குவாரி நடத்துபவர்கள் சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த வெடிபொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதனை காவல் நிலைய வளாகத்தில் வைத்திருந்தனர். தற்போது அந்த வெடிப்பொருள்களே எதிர்பாராதவிதமாக வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.