இந்தியா

மும்பை குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து

மும்பை செம்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

DIN

மும்பை செம்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பையின் புறநகர் பகுதியான செம்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் 12வது மாடியில் இன்று (சனிக்கிழமை) பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நியூ திலக் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டடத்தின் 12வது மாடியில் நடந்த தீ விபத்து சம்பவத்தில் உயிர்சேதம் மற்றும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து  குறித்து தீயணைப்பு படையினருக்கு 2 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு தீயணைப்பு வாகனங்கள், ஒரு ஜம்போ வாட்டர் டேங்கர் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்ணாடிப் பார்வை... மோக்‌ஷா கெளஷால்!

புதிதாய் வெட்கம்... குஷி தூபே!

மின்னும் மிர்ணாளினி!

காஸாவில் மக்கள் தஞ்சமடைந்த முகாம்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 16 பேர் பலி!

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் இட்லி கடை!

SCROLL FOR NEXT