இந்தியா

ரூபாய்க்கு பதில் டாலர் தருவதாக மருந்தக உரிமையாளரிடம் மர்ம கும்பல் கைவரிசை

மகாராஷ்ர மாநிலத்தில் மருந்தக உரிமையாளரிடம் அமெரிக்க டாலர்கள் தருவதாகக் கூறி மர்ம கும்பல் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

மகாராஷ்ர மாநிலத்தில் மருந்தக உரிமையாளரிடம் அமெரிக்க டாலர்கள் தருவதாகக் கூறி மர்ம கும்பல் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: “ இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் மருந்தகத்திற்கு மருந்துகள் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது கடையின் உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்து தன்னிடம் அமெரிக்க டாலர்கள் இருப்பதாகவும், இந்திய ரூபாய் கொடுத்தால் மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறியதாக தெரிகிறது. 

இதனையடுத்து, மருந்தக உரிமையாளர் 3 லட்சம் ரூபாய் கொடுத்து டாலர்கள் உள்ள பையினைப் பெற்றுள்ளார். 1,673 டாலர் நோட்டுகள் தருவதாக கூறப்பட்டிருந்த நிலையில் அந்தப் பையில் வெறும் காகிதங்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு மருந்தக உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த மோசடி கும்பலை பிடிக்கும் முயற்சியில் காவல் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.” என்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இதே போன்று டாலர் நோட்டுகள் தருவதாக அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்நர் ஏமாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT