இந்தியா

முலாயம் சிங் யாதவ் மறைவு: உ.பி.யில் 3 நாள்கள் துக்கம் அனுசரிப்பு

முலாயம் சிங் யாதவின் மறைவையொட்டி உத்தரப் பிரதேசத்தில் மூன்று நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

முலாயம் சிங் யாதவின் மறைவையொட்டி உத்தரப் பிரதேசத்தில் மூன்று நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 

மேலும், முலாயம் சிங் யாதவின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் உத்தரப் பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார். 

முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்குகள் உத்தரப் பிரதேசத்திலுள்ள அவர்களின் சொந்த கிராமமான சைஃபாய் பகுதியில் நடைபெறும் எனவும் சமாஜவாதி கட்சி தெரிவித்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் திங்கள் கிழமை இன்று (அக்.10) காலமானார். அவருக்கு வயது 82.

ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி  அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டாா். அவரின் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை அவர் உயிர் பிரிந்ததாக சமாஜவாதி சுட்டுரைப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

சீருடைப் பணிகள் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளா்கள் போராட்டம்: கற்களை வீசி தாக்கியதால் விரட்டி அடித்த போலீஸாா்

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

இன்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு

SCROLL FOR NEXT