இந்தியா

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சந்திரசூட்: யு.யு. லலித் பரிந்துரை

DIN

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்குமாறு, உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு லலித் வரும் நவம்பர் 8-ஆம் தேதி ஓய்வுபெறவிருக்கிறார்.

இந்த நிலையில், மத்திய சட்ட அமைச்சகத்திடமிருந்து வந்த பரிந்துரையை ஏற்று, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்கலாம் என்று யு.யு. லலித் பரிந்துரை கடிதம் அனுப்பியிருக்கிறார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2024ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி வரை பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT