குழாயில் தண்ணீருக்கு பதில் மதுபானம்!
மத்திய பிரதேசம் குணா கிராமத்தில் உள்ள சட்டவிரோத மதுபானக் கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், காவல்துறையினருக்கு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்ததுள்ளது.
மத்திய பிரதேசம் குணா கிராமத்தில் உள்ள சட்டவிரோத மதுபானக் கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், காவல்துறையினருக்கு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்ததுள்ளது.
கை பம்ப்பில் தண்ணீருக்குப் பதிலாக மதுபானம் வருவதை கண்டறிந்த காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில், தரையில் மதுபான தொட்டிகளை புதைத்து, அதன் மேல் ஒரு கை பம்பை நிறுவி உள்ளனர். அந்த கை பம்ப் மதுபானம் அடங்கிய தொட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கை பம்பில் இருந்து மதுபானம் எடுக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்ததுள்ளது.
தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு செல்வதற்குள், குற்றவாளிகள் தப்பியோடிவிட்டனர். சட்டவிரோத குற்றத்தில் ஈடுபட்ட 8 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: பொது இடங்களில் சார்ஜ் செய்வோர் கவனத்திற்கு...
அக்கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மதுபானம் தயாரிக்கப்படுகிறது. காவல் துறையினர் கூடுதலாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.