இந்தியா

இன்ஃபோசிஸ் தலைவர் ரவிக்குமார் ராஜிநாமா!

DIN


நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் தலைவர் எஸ். ரவிக்குமார் திடீரென ராஜிநாமா செய்துள்ளார். ரவிக்குமார் ராஜிநாமா செய்ததற்கான எந்த காரணத்தையும் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

மென்பொருள் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் தனது பதவியை செவ்வாய்கிழமை (அக்.11) முதல் ராஜிநாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ராஜிநாமா குறித்து பங்குச்சந்தைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்ஃபோசிஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ரவிக்குமார் ராஜிநாமா செய்துள்ளது நிறுவனத்துக்கு பெரும் இழப்பு எனவும்,  நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் ரவிக்குமார், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 2016 ஆல் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இன்ஃபோசிஸ் நிர்வாகக் குழுவின் ஒரு பகுதியாக நிறுவனம் முழுவதும் பல்வேறு பொறுப்புகளை வகித்தார் மற்றும் காப்பீடு மற்றும் கட்டண வணிகத்தை வழிநடத்தினார். இன்ஃபோசிஸ்  நிறுவனத்தின் மூன்றாவது அதிக சம்பளம் பெற்று வந்த நிர்வாகி ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவு நாளை வியாழக்கிழமை(அக்.13) வெளியாக உள்ளது. அன்று பங்குதாரர்களிடம் இருந்து பங்குகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 2.65 சதவீதமாக சரிந்து ரூ.1,423,90 வர்த்தகம் முடிவடைந்தது. 

ரவிக்குமார், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சர்வதேச அளவில் உள்ள அனைத்து தொழில் சேவை பிரிவுகளையும் கவனித்துக் கொண்டார். அவர் ஆலோசனை, டிஜிட்டல் விற்பனைகள், தொழில்நுட்ப வளர்ச்சி, உள்கட்டமைப்பு, பொறியியல் தரவு மற்றும் பகுப்பாய்வு, கிளவுட் மற்றும் சேவை வரிகளை கவனித்துக் கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT