இந்தியா

ஒடிசாவில் இருவேறு பேருந்துகள் விபத்து: 30 பேர் காயம்

DIN

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடந்த இருவேறு பேருந்து விபத்துக்களில் குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

பிர்பூம் மாவட்டத்தில் உள்ள முராரோய் பகுதியிலிருந்து 50 பேருடன் பூரி நோக்கிச் சென்ற பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் லக்ஷ்மநாத் டோல் கேட் அருகே லாரி  மோதியதில் உதவியாளர் உள்பட 20 பேர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் ஜலேஸ்வரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

மேலும், வியாழன் அதிகாலை ஹல்டிபாடா அருகே தேசிய நெடுஞ்சாலை 60ல் நடந்த மற்றொரு விபத்தில், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து புறப்பட்ட ராஜ்கனிகா செல்லும் பயணிகள் பேருந்து சாலையை விட்டு விலகி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த இருவேறு விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT