இந்தியா

ஹிமாச்சலில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12-ல் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

DIN

ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12-ல் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 17-ல் தொடங்கி அக்டோபர் 25-ல் நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும்.

வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 29 ஆம் தேதி என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. குஜராத் சட்டப்பேரவைத்  தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT