வருமான வரித்துறை 
இந்தியா

ஆர்.எஸ் சகோதரர்களின் கடை, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை!

ஹைதராபாத்தில் ஆர்.எஸ்.சகோதரர்களுக்குச் சொந்தமான கடை மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 

DIN

ஹைதராபாத்தில் ஆர்.எஸ்.சகோதரர்களுக்குச் சொந்தமான கடை மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 

ஆர்எஸ் சகோதரர்களின் முன்னணி ஆடை மற்றும் நகை விற்பனை நிறுவனங்களின் வெவ்வேறு வளாகங்களில் 25 ஐடி குழுக்கள் இணைந்து ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தின.

ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் ஆகிய இரட்டை நகரங்களில் உள்ள அமீர்பேட்டை, கோகட்பல்லி, சனத் நகர், செகந்திராபாத், மெகதிப்பட்டினம் மற்றும் பிற இடங்களில் உள்ள ஆர்எஸ் சகோதரர்களின் கடைகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சனத் நகரில் உள்ள ஆர்எஸ் சகோதரர்களின் கிடங்கில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால், ஊழியர்கள் அந்த வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

கணக்கு துறை ஊழியர்களின் உதவியுடன் கணினியில் உள்ள கணக்குகள் மற்றும் பிற பதிவுகளை அதிகாரிகள் சரிபார்த்தனர். 

இதுகுறித்து வணிக வரித்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT