முகப்பு
இந்தியா

கர்நாடக மடாதிபதி மீது மேலும் ஒரு பாலியல் புகார்: காவல்துறை வழக்குப்பதிவு

கர்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது பாலியல் புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 19 அக்டோபர், 2022 at 10:07 AM
சிவமூா்த்தி முருகா சரணரு
பகிர்:

கர்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது பாலியல் புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பள்ளிச் சிறுமிகள் இருவா் அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கா்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் உள்ளார். 

இதனிடையே, ஜாமீன் கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மடாதிபதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணையில் உள்ளது. 

Advertisement

இந்நிலையில், கர்நாடக மடாதிபதி  சிவமூா்த்தி முருகா சரணரு மீது மேலும் ஒரு பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மடத்தில் சமையல் செய்பவராக பணிபுரிந்த பெண், தன்னுடைய இரு மகள்களையும் பாலியல் கொடுமை செய்ததாக மடாதிபதி மீது புகார் கூறியுள்ளார். பாலியல் கொடுமைக்கு ஆளான தன் மகள்களில் ஒருவரையும் அவர் உடன் அழைத்துச் சென்றார். 

இந்நிலையில், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் மடாதிபதி, விடுதி வார்டன் உள்பட 7 பேர் மீது மைசூர் நசராபாத் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.