இந்தியா

எகிப்தில் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய ஜெய்சங்கர்!

DIN

இரண்டு நாள் பயணமாக எகிப்து சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட சுட்டுரை பதிவில், 

கெய்ரோவின் அல்-ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலமாக இன்றைய நாள் தொடங்கியுள்ளது. இது சுதந்திரத்திற்கான காரணத்துடன் நெருக்கமாக தொடர்புடையது.

அனைவருக்குமான நீதி மற்றும் சமத்துவத்திற்காக பாடுபட அவரது செய்தி உலகை ஊக்குவிக்கட்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

2019-இல் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, அல்-ஹொரேயா பூங்காவில் அவருக்கு சிலை திறக்கப்பட்டது. 

இந்த பயணத்தின் முக்கியத்துவமாக இருதரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து அவர் விவாதிக்க உள்ளார். இது அவருக்கு முதல் எகிப்து பயணம் ஆகும்

மேலும், ஆப்ரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்களிப்புகளில் ஒன்றாக எகிப்து இருந்து வருகிறது. இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT