முகப்பு
இந்தியா

கடன் தராவிட்டால் வங்கியை குண்டு வைத்து தகர்ப்பேன்: இப்படியொரு கடன் விண்ணப்பம்

எஸ்பிஐ வங்கியை தொலைபேசியில் அழைத்து, தனக்கு ரூ.10 லட்சம் கடன் அளிக்காவிட்டால் வங்கியை குண்டு வைத்து தகர்ப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

Updated On : 15 அக்டோபர், 2022 at 5:40 PM
பகிர்:


மும்பை: அடையாளம் தெரியாத நபர், தெற்கு மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கியை தொலைபேசியில் அழைத்து, தனக்கு ரூ.10 லட்சம் கடன் அளிக்காவிட்டால் வங்கியை குண்டு வைத்து தகர்ப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

எஸ்பிஐ வங்கிக்கு, அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் அழைத்து, தனக்கு ரூ.10 லட்சம் கடன் தராவிட்டால் வங்கி மேலாளரைக் கடத்திக் கொலை செய்து விடுவதாகவும், வங்கியை வெடிகுண்டு வைத்து தகர்த்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில், தொலைபேசியில் அழைத்தவர் மேற்கு வங்கத்தில் இருந்து அழைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை காவலர்கள் மேற்கு வங்கம் விரைந்துள்ளனர்.

நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றாக பாரத ஸ்டேட் வங்கி திகழ்கிறது. வங்கிக்கு ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.