கார்த்தி சிதம்பரம் 
இந்தியா

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு? கார்த்தி சிதம்பரம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் சசிதரூருக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதரம்பரம் தெரிவித்துள்ளார். 

DIN


அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் மல்லிகர்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோருக்கு இடையே நேரடி போட்டி நிலவி வரும் நிலையில், சசிதரூருக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதரம்பரம் தெரிவித்துள்ளார். 

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் வருகிற 17 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் போட்டியிடும் மல்லிகர்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் இரண்டு பேரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூரை ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் எந்த ஒரு வேட்பாளருக்கும் வெளிப்படையாக ஆதரவு அளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே ஆரோக்கியமான போட்டி நடந்து வாக்களிக்க தகுதி உடையவர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பம்.

சோனியா காந்தி ஏதோ ஒரு வேட்பாளரை மட்டும் விரும்புகிறார்கள் என்று தவறாக சிலர் பரப்பி வருகிறார்கள். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. 

எனவே, வாக்களிக்க தகுதியுடைய அத்தனை காங்கிரஸ் நண்பர்களும் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். 
நான் சசிதரூருக்கு தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் சசிதரூர் எம்.பி.க்கு வாக்களிக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT