இந்தியா

காந்தி குடும்பத்தின் அறிவுரையை கேட்பதில் வெட்கப்பட ஒன்றுமில்லை: மல்லிகார்ஜுன கார்கே

DIN

காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவதற்கு காந்தி குடும்பத்தின் அறிவுரை மற்றும் ஆதரவினை வாங்குவதில் எந்த ஒரு வெட்கமும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வளர்சிக்காக அவர்கள் உழைத்துள்ளனர் அதனால் அவர்களின் அறிவுரையை ஏற்று கட்சியை வழிநடத்துவதில் எந்த ஒரு வெட்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். நாளை (அக்டோபர் 17) காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 


இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசியதாவது: சோனியா காந்தி காங்கிரஸ் கட்சிக்காக 20 ஆண்டுகளாக உழைத்துள்ளார். காங்கிரஸினை வலிமை வாய்ந்த கட்சியாக மாற்றியதில் அவர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. ராகுல் காந்தி காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருமே காங்கிஸினை வலிமையான கட்சியாக மாற்ற கடுமையாக உழைத்துள்ளனர். நான் காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் காந்தி குடும்பம் என்ன சொல்கிறதோ அதனைக் கேட்டுதான் இயங்குவேன் என பாஜக பேசி வருகிறது.

நேரு-காந்தி குடும்பம் இந்த நாட்டிற்காக பல்வேறு பங்களிப்புகளையும், தியாகங்களையும் செய்துள்ளனர். ஜவஹர்லால் நேரு தொடங்கி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பின்னர் சோனியா காந்தி எனப் பலரும் தங்களது கடின உழைப்பை நாட்டு மக்களுக்காக நல்கினர். சில தேர்தல்களில் தோல்வியடைந்தற்காக காங்கிரஸ் குறித்து தவறாக விமர்சிப்பது சரியாகாது. அவர்கள் இந்த நாட்டுக்காக நல்லது செய்துள்ளார்கள். அவர்களது அறிவுரை எப்போதும் கட்சியின் நலன் சார்ந்தே இருக்கும். அதனால், நான் அவர்களது அறிவுரை மற்றும் ஆதரவினை கண்டிப்பாக எதிர்பார்ப்பேன். அதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை.

உங்களது அறிவுரையில் இருந்து பயனுள்ள விஷயங்கள் நடைபெறுமானால் அதையும் நான் எடுத்துக் கொள்ள தயாராக உள்ளேன். அவர்கள் கட்சிக்காக உழைத்துள்ளார்கள் அவர்களது அறிவுரையை ஏற்று நடப்பது எனது கடமை. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவருக்கும் நாட்டின் அனைத்துப் பகுதிகள் குறித்தும் நன்கு அறிந்தவர்கள். அவர்களுக்கு யார் கட்சியின் நலன் மற்றும் ஒற்றுமைக்காக உழைப்பார்கள் என தெரியும். நான் அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்வேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT