சசி தரூர்(கோப்புப்படம்) 
இந்தியா

மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றால் ஒத்துழைப்போம்: சசி தரூர்

மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றால் ஒத்துழைப்போம் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.  

DIN

மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றால் ஒத்துழைப்போம் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு அக்கட்சியைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவும் சசி தரூரும் நேரடியாக மோதுகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொதுச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் என 9,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்கள் தில்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் நாடுமுழுவதும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க கியூ.ஆர்.கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றால் ஒத்துழைப்போம் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் பிரச்னை இல்லை. கட்சி செயல்படும் முறையில் மாற்றம் கொண்டுவரவே விரும்புகிறோம். மல்லிகார்ஜுன் கார்கே ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர், அவர் வெற்றி பெற்றால், நாங்கள் இயல்பாக ஒத்துழைப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்த வயது முதிர்ந்த தாயும் மகனும் தற்கொலை: போலீஸ் விசாரணை

ஐபிஎல் மினி ஏலம்- எந்தெந்த அணியிடம் எவ்வளவு தொகை?

10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! பாஜக பிரமுகருக்கு சாகும் வரை ஆயுள் சிறை!

கதையா? இசையமைப்பாளரா? சுந்தர். சி விலகக் காரணம் என்ன?

எஸ்ஐஆரின் கீழ் 12 மாநில, யூனியன் பிரதேசங்களில் 95% மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT