நீங்கள் வாங்கும் மருந்து போலியானதா? கண்டுபிடிக்க க்யூஆர் கோடு கம்மிங் 
இந்தியா

மிசோரமில் ரூ.30 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்!

மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் ரூ.30 கோடி மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அசாம் ரைபிள்ஸ் தெரிவித்துள்ளது. 

DIN


மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் ரூ.30 கோடி மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அசாம் ரைபிள்ஸ் தெரிவித்துள்ளது. 

மெத்தாம்பேட்டமைன் சட்டவிரோத போதைப்பொருள் மருந்துகளில் ஒன்றாகும். இதை மெத் என்றும் அழைப்பதுண்டு. 

அசாம் காவல்துறை, மாநில கலால் மற்றும் போதைப்பொருள் துறை அதிகாரிகள் திங்களன்று ஐஸ்வாலின் வடகிழக்கு பகுதியில் உள்ள பால்க்லாந்தில் நடமாடும் வாகன சோதனைச் சாவடியை அமைத்தனர். 

அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து, சோதனை செய்ததில் அதிலிருந்த ரூ.30.84 கோடி மதிப்புள்ள 92,550 மெத் மாத்திரைகளை மீட்டனர். மேலும், கார் ஓட்டுநர்  கைது செய்யப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக பிடிபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT