நடைப்பயணத்துக்கு இடையே ராகுல் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யம்
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரையில் 3,750 கி.மீ. பயண இலக்குடன் ராகுல் காந்தி தலைமையில் கா்நாடகத்தில் பயணித்து வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு இடையே, ராகுல் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரையில் 3,750 கி.மீ. பயண இலக்குடன் ராகுல் காந்தி தலைமையில் நடந்து வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு இடையே, ராகுல் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.
ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் ஒற்றுமை நடைப்பயணம் தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க.. ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்கலாம்: அதிர்ச்சிதரும் தகவல் வெளியானது
அந்த வகையில், ராகுல் நடைப்பயணத்துக்கு இடையே, சற்று ஓய்வு எடுத்தபோது, அங்கிருந்தவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். அந்த விடியோவும் வைரலாகி வருகிறது.
அதாவது, கூட்டத்திலிருந்த ஒருவர், இந்த நடைப்பயணத்தின் போது சருமம் கருப்பாகாமல் இருக்க நீங்கள் எந்த வகையான சன்ஸ்க்ரீன் பயன்படுத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராகுல், ஆமாம், எனது தாயார் எனக்கு சன்ஸ்க்ரீனை அனுப்பியிருந்தார், ஆனால் அதனை நான் பயன்படுத்தவில்லை என்று கூறிவிட்டு, தனது ஆடையின் கையை உயர்த்தி, நடைப்பயணம் தொடங்கிய பிறகு தான் எந்த அளவுக்கு நிறம் மாறியிருக்கிறேன் என்பதைக் காட்டினார். அது அங்கிருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.
இதைக் கேட்ட மற்றொருவர், எனது மகளும் இதைத்தான் சார் சொன்னார். ராகுல் நிறம் மாறிவருவது நன்றாகவே தெரிகிறது என்று சொன்னதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் வாய்விட்டு சிரித்துவிட்டனர்.
இந்த ஓய்வு நேரத்தின் போது, தன்னுடன் நடந்த அனைவரும் நன்றாக இருக்கிறார்களா என்று ராகுல் ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்தார். அவர்களும், ஆமாம் சார்.. நூறு சதவீதம் என்று பதிலளித்தனர்.