கோப்புப் படம் 
இந்தியா

ஹிமாசல் தேர்தல்: 62 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்கட்டமாக 62 வேட்பாளர்களை புதன்கிழமை இன்று (அக்.19) பாஜக அறிவித்துள்ளது. 

DIN

ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்கட்டமாக 62 வேட்பாளர்களை புதன்கிழமை இன்று (அக்.19) பாஜக அறிவித்துள்ளது. 

ஹிமாசலப் பிரதேச பேரவையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நவம்பா் 12-இல் தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 8-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 62 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 பேர் புதிதாக களமிறக்கப்பட்டுள்ளனர். 

செவ்வாய்க்கிழமை நடைபெற பொதுத்தேர்தல் குழுவில் இந்த வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

அதன்படி, மந்தி மாவட்டத்தின் செராஜ் தொகுதியில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் போட்டியிடவுள்ளார். இதேபோன்று, நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ், ஷிம்லா தொகுதிக்கு பதிலாக கசும்தி தொகுதியில் போட்டியிடவுள்ளார். ஷிம்லாவில் சஞ்சய் சூட் களமிறக்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT