நாட்டில் புதிதாக 2,141 பேருக்கு கரோனா பாதிப்பு!
நாட்டில் ஒரு நாளில் புதிதாக 2,141 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,36,517 ஆக உள்ளது.
நாட்டில் ஒரு நாளில் புதிதாக 2,141 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,36,517 ஆக உள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
நாட்டில் புதிதாக 2,141 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,36,517 ஆக உள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 20 இறந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,28,943 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,417 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,82,064 ஆக பதிவாகியுள்ளது. அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25,510 ஆகக் குறைந்துள்ளது.
இதையும் படிக்க | காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில்இரண்டாவது தலித் சமூக தலைவா்
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,19,46,34,236 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 4,90,711 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.