இந்தியா

திருப்பதியில் நிர்மலா சீதாராமன் வழிபாடு!

DIN


 
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். 

மூன்று நாள் பயணமாக குடும்பத்துடன் ஆந்திரத்துக்கு வருகை தந்துள்ள நிர்மலா சீதாராமன், நேற்றிரவு ஸ்ரீ பத்மாவதி தேவி கோயிலுக்குச் சென்றார், பின்னர் 70 கி.மீ தொலைவில் உள்ள சித்தூர் காணிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகரை வழிபாடு செய்தார். 

திருப்பதியில் இரவு தங்கிய மத்திய அமைச்சர் இன்று காலை ஏழுமலையானை வழிபட்டார். அவருக்கு தேவஸ்தான தலைவர் ஒய்.பி.சுப்பாரெட்டி, கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் வரவேற்பு அளித்தனர். 

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை வளாகத்தில் நடைபெறும் வருமான வரித்துறை கருத்தரங்கில் அவர் பங்கேற்றார். 

பின்னர், ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள புகழ்பெற்ற பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஸ்ரீவாயுலிங்கேஸ்வர சுவாமியைத் தரிசிக்க நிர்மலா சீதாராமன் செல்லவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT