இந்தியா

ஆந்திரத்தில் 3-வது நாளாக ராகுல் நடைப்பயணம்

DIN

ஆந்திரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். 

பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டவும் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

தமிழகம், கேரளம், கர்நாடகத்தைத் தொடர்ந்து ஆந்திரத்தில் தற்போது நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

ஆந்திரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக இன்று கர்னூல் பகுதியில் இருந்து நடைப்பயணத்தைத் தொடங்கினார். காங்கிரஸ் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதுடன் அவருடன் பயணம் செய்து வருகின்றனர். நாளை(அக்.21) வரை அவர் ஆந்திரத்தில் பயணம் மேற்கொள்கிறார். 

கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று, தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவு நடைப்பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT