பண்டிகைக் கால தள்ளுபடியை அறிவித்த ரயில்ரெசிபி 
இந்தியா

பண்டிகைக் கால தள்ளுபடியை அறிவித்த ரயில்ரெசிபி

ரெயில் ரசிபி என்ற உணவு விநியோக நிறுவனம், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 50 சதவீத சிறப்பு விழாக் காலச் சலுகையை அறிவித்துள்ளது.

ANI


புது தில்லி: ரயில் ரசிபி என்ற உணவு விநியோக நிறுவனம், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 50 சதவீத சிறப்பு விழாக் காலச் சலுகையை அறிவித்துள்ளது.

இந்த விழாக் கால சலுகையானது அக்டோபர் 21ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை சுமார் 14 நாள்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள பயனாளர்கள் ரயில்ரெசிபியின் இணையதளம் அல்லது செயலியை பதிவிறக்கம் செய்தோ அல்லது 844-844-0386 எண்ணில் அழைத்தோ வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும், உணவு பொருள்களை ஆர்டர் செய்யும் முறைகளையும் எளிமைப்படுத்தியிருக்கிறதாம். ரயில் பயணிகள் எங்களிடம் உணவை ஆர்டர் செய்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். அவர்களுக்கு உரிய நேரத்தில், உரிய இடத்தில் சுவையான உணவு கிடைப்பதற்கான அனைத்து பொறுப்புகளையும் நாங்கள் ஏற்கிறோம் என்றும் அது தெரிவிக்கிறது.

ரயில் ரெசிபி நிறுவனம் 650க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில், 6000க்கும் மேற்பட்ட ரயில்களில் உணவு விநியோகம் செய்கிறது. சுத்தமான ஜெயின் உணவு, மார்வாடி உணவு என எதை வேண்டுமானாலும் ஆர்டர் செய்யலாம் என்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி: இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT