இந்தியா

தில்லி ஐஐடியில் 157 மரங்கள் இடமாற்றம் செய்ய அரசு ஒப்புதல்!

DIN

தில்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் 2 புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான முன்மொழிவுக்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 157 மரங்கள் இடமாற்றம் செய்யப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கேஜரிவால் தெரிவித்ததாவது, 

புதிதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் புதிய ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இதற்காக ஐஐடி வளாகத்தில் உள்ள 157 மரங்கள் வேறு இடத்தில் இடமாற்றம் செய்யப்படும். ஆனால், புதிதாக 1,570 மரங்கள் நடப்படும் என்றார். 

ஐஐடியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடையும் வகையில் புதிய கட்டடங்கள் கட்டப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு மரங்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஐஐடி ஏற்கும்.

தில்லி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், வேம்பு, அமல்டாஸ், பிபால், பில்கான், குலர், பர்கட், மா மற்றும் ஷீஷாம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் நடப்படும்.

இடமாற்றம் செய்யப்பட வேண்டிய மரங்களைப் பொறுத்தவரை, தேவையான நிபந்தனைகளை நிறைவேற்றிய பிறகு, உடனடியாக செயல்முறையைத் தொடங்கி, ஆறு மாதங்களுக்குள் முடிக்க ஐஐடிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT