இந்தியா

கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு! உத்தரகண்டில் பல்வேறு திட்டங்கள் தொடக்கம்

உத்தரகண்ட் கேதார்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தரிசனம் செய்தார். 

DIN

உத்தரகண்ட் கேதார்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தரிசனம் செய்தார். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் விமான நிலையம் வந்தார். அவரை மாநில ஆளுநர் குர்மீத் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி வரவேற்றனர். 

பின்னர் கேதார்நாத் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்த பிரதமர் மோடி, ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடம் சென்றார். 

ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடம் கடந்த 2013 வெள்ளத்தில் சேதமடைந்ததையடுத்து மறுசீரமைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பிரதமர் மோடி திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது. 

கேதார்நாத் ரோப் சேவை உள்பட உத்தரகண்ட் மாநிலத்தில் ரூ. 3,400 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். மேலும் கேதார்நாத்தில் மந்தாகினி அஷ்டபதி மற்றும் சரஸ்வதி அஷ்டபதி பணிகளையும் மேற்பார்வையிடுகிறார். 

தொடர்ந்து பத்ரிநாத் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT