இந்தியா

கட்டடம் இடிந்து விழப்போவதை கணித்த தலைமைப் பேராசிரியர்; நூலிழையில் தப்பியவர்கள்

DIN


மைசூரு: பழைமையான கல்லூரியின் வேதியியல் ஆய்வுக் கூட கட்டடம் இடிந்து விழப்போவதை முன்கூட்டியே கணித்த தலைமைப் பேராசிரியர், அங்கிருந்தவர்களை வெளியேற்றிய அடுத்த நொடியே அவர் கணித்ததுபோல நடந்தது பலரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மைசூருவில் பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த மகாராணி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் அனைவரும், வேதியியல் ஆய்வுக் கூடத்திலிருந்து வெளியேறிய அடுத்த நொடியே அது இடிந்து விழுந்தது. நூலிழையில் உயிர் தப்பிய அனைவரும் அடைந்த அதிர்ச்சி சற்று நேரம் வரை அகலவில்லை.

இதற்குக் காரணம், கல்லூரி தலைமைப் பேராசிரியர் ரவியின் சமயோஜித புத்திதான் காரணம், அவரால்தான் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என்கிறார்கள்.

வேதியியல் ஆய்வுக் கூடத்தின் மேல்கூரையிலிருந்து தண்ணீர் கசிவதாகவும், விரிசல்கள் அதிகரித்திருப்பதாகவும் துறை தலைவர் தலைமைப் பேராசிரியரிடம் கூறியுள்ளார்.

உடனே நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்த அவர், உடனடியாக அங்கிருந்து அனைவரும் வெளியேறி, மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு கதவைப் பூட்டுமாறு உத்தரவிட்டார்.

அவர் சொன்னபடி கதவைப் பூட்டியதும், மைசூரு தொகுதி எம்எல்ஏவுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்து, கல்லூரியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில், கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்து நிலையம்....மாதிரி புகைப்படம் வெளியீடு....

போதையில் கார் ஓட்டி இருவர் பலியாக காரணமான சிறுவன்: நடந்தது என்ன?

ஷெங்கன் விசா கட்டணம் உயர்வு... ஐரோப்பா செல்பவர்கள் கவனத்திற்கு!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

பெங்களூரு குண்டுவெடிப்பில் கோவையில் உள்ள மருத்துவர்களுக்கு தொடர்பு? என்ஐஏ அதிகாரிகள் சோதனை

SCROLL FOR NEXT