இந்தியா

அமைச்சரவை விரிவாக்கமா அல்லது புதிய அமைச்சரவையா பொறுத்திருந்து பாருங்கள்: பசவராஜ் பொம்மை

அமைச்சரவை விரிவாக்கம் குறித்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க விரைவில் தில்லி செல்ல உள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

DIN

அமைச்சரவை விரிவாக்கம் குறித்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க விரைவில் தில்லி செல்ல உள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதா அல்லது அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை உருவாக்கப்பட உள்ளதா என்பது குறித்து அவர் உறுதிபட எதுவும் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: நான் விரைவில் தில்லி செல்ல உள்ளேன். அங்கு கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளேன். அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதா அல்லது புதிதாக மாற்றியமைப்படுகிறதா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பாருங்கள். யார் வேண்டுமானாலும் அமைச்சரவையில் இணைய உள்ளதாக விருப்பம் தெரிவிக்கலாம். ஆனால், இறுதியில் கட்சித் தலைமையில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதுவே பின்பற்றப்படும் என்றார்.

அடுத்த ஆண்டு கர்நாடக மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT