இந்தியா

கேரள ஆளுநர் உத்தரவு: உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் முறையீடு

DIN

9 பல்கலை.யின் துணைவேந்தர்கள் இன்றைக்குள் பதவி விலக வேண்டும் என்ற கேரள ஆளுநர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரின் நியமனத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

அந்த மாநிலத்தில் உள்ள மேலும் சில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், யுஜிசி விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, அந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் நியமனமும் கேள்விக்குறியாகியுள்ளது. 

இந்நிலையில், கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி, மாநிலத்தில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

அந்தப் பதிவுடன் எந்தெந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற பட்டியலையும் அவா் இணைத்திருந்தாா். அக்.24-ஆம் தேதி அனைவரும் ராஜிநாமா கடிதங்களை அனுப்ப வேண்டும் என்று அவா் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த நிலையில் பதவி விலக வேண்டும் என்ற கேரள ஆளுநர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.  இம்மனுக்களை அவசர வழக்காக கேரள உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று மாலை 4 மணிக்கு விசாரிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபிக்கு எதிராக தில்லி கேப்பிடல்ஸை வழிநடத்தப்போவது யார் தெரியுமா?

கவனத்தை ஈர்க்கும் விக்ரமின் 'வீர தீர சூரன்’ போஸ்டர்!

மோடியுடன் நேருக்கு நேர் விவாதம்: ராகுல் காந்தி சம்மதம்!

வயது முதிர்ந்த போதிலும்... எம்.எஸ்.தோனிக்காக சிஎஸ்கேவின் தரமான பதிவு!

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT