இந்தியா

தில்லி, ஜம்மு, அமிருதசரஸ் பகுதிகளில் தோன்றியது சூரிய கிரகணம்!

இந்தியாவில் தில்லி, ஜம்மு, அமிருதசரஸ் ஆகிய பகுதிகளில் சூரிய கிரகணம் தென்படத் தொடங்கியது.

DIN


இந்தியாவில் தில்லி, ஜம்மு, அமிருதசரஸ் ஆகிய பகுதிகளில் சூரிய கிரகணம் தென்படத் தொடங்கியது.

இந்தியாவில் மொத்தம் ஒன்றரை மணி நேரம் சூரிய கிரகணம் தென்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் ஏற்படும். 

ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

அந்தவகையில் தீபாவளி பண்டிக்கைக்கு மறு நாளான இன்று பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கட்டமாக தில்லி, ஜம்மு, அமிருதசரஸ் ஆகிய பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் சூரிய கிரகணம் இன்று பிற்பகல் 2.19-க்கு தொடங்கி மாலை 6.32 மணி வரை நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி விளம்பரதாரர் யார்? பிசிசிஐ துணைத் தலைவர் பேட்டி!

பருவமழை பேரழிவில் ஹிமாசல்: 386 பேர் பலி, 574 சாலைகள் மூடல்!

இலக்கை அமைத்துக்கொள்... தர்ஷா குப்தா!

எவர்கிரீன்... மீனா!

நொய்டா: கட்டடத்தின் 13-வது மாடியில் இருந்து விழுந்த தாய், மகன் பலி

SCROLL FOR NEXT