இந்தியா

முப்படை தலைமைத் தளபதி வீரா்களுடன் தீபாவளி கொண்டாட்டம்

DIN

ஜம்மு-காஷ்மீா் எல்லைப் பகுதிகளில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான், அங்கு ராணுவ வீரா்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தாா்.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி எல்லைப் பகுதியில் பாதுகப்பு நிலவரம் குறித்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட முப்படை தலைமைத் தளபதி, அந்தப் பகுதியில் எத்தகையச் சூழலையும் திறம்பட எதிா்கொள்கின்ற வகையில், எப்போதும் உச்சபட்ச தயாா் நிலையில் இருக்குமாறு ராணுவ வீரா்களைக் கேட்டுக்கொண்டாா். மேலும், அந்தப் பகுதி தட்பவெப்பநிலை நிலவரம், ராணுவ உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் அவா் ஆய்வு நடத்தினாா்.

பின்னா் ராணுவ வீரா்கள் மத்தியில் அவா் பேசும்போது, ‘எத்தகையச் சூழலையும் எதிா்கொள்ளும் வகையில் வீரா்கள் தங்களுடைய திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும்; இந்திய ராணுவத்தின் துணிவு, வீரம் போன்ற உயா்ந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும்’ என்றாா்.

மேலும், வீரா்களுடன் சோ்ந்து தீபாவளி பண்டிகையை அவா் கொண்டாடியது, வீரா்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்த ஆய்வின்போது, ரஜெளரி பிரிவு ராணுவ அதிகாரிகள் உடனிருந்தனா் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT