இந்தியா

அச்சம்: குடும்பத்தோடு வீடுகளை காலி செய்த காஷ்மீரி பண்டிட்கள்!

காஷ்மீர் பண்டிட் பூரன் கிரிஷன் பட் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 10-க்கும் மேற்பட்ட காஷ்மீரி பண்டிட்கள் தங்கள் குடும்பத்தோடு வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 

DIN

காஷ்மீர் பண்டிட் பூரன் கிரிஷன் பட் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அச்சத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட காஷ்மீரி பண்டிட்கள் தங்கள் குடும்பத்தோடு வீடுகளை விட்டு வெளியேறி ஐம்முவுக்கு இடம் பெயர்ந்தனர். 

அக்டோபர் 15ம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சௌத்ரிகுண்ட் கிராமத்தில் பட் தனது வீட்டிற்கு வெளியே பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். 

பட்  கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 35 பேர் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சௌதரிகுண்ட் கிராமத்தில் உள்ள தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி ஜம்முவுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அக்.18 அன்று உள்ளூர் அல்லாத மோனிஷ் குமார் மற்றும் ராம் சாகர் ஆகிய இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, அவர் தங்கியிருந்த வாடகை வீட்டின் மீது பயங்கரவாதி ஒருவர் கையெறி குண்டு வீசியதில் இருவரும் உயிரிழந்தனர். 

பயங்கரவாதி கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு இடத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT